மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு!
நம் நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களே வேலை செய்வது மிகவும் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருத்தமளிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வேலையின் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்படுகின்றன. அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அது அவர்களை சென்று சேர்கிறதா என்பது கூட தெரியவில்லை.
எனவே தற்போது பாதாள சாக்கடைகள், கழிவு நீர் தொட்டிகள், சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது என்றும், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவர்களின் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதற்கு தற்போது யாரும் மனிதர்களை பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அதை தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்தியும் வைத்துள்ளனர்.