இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் இந்த கேக்குகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதன் காரணமாக மக்களை அப்படியே கவர்ந்து இழுக்கின்றன.

இவர் தயாரிக்கும் புது புது வகைகளை இப்போதெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் புதிதாக பாம்பு வடிவில் ஒரு கேக் தயாரித்துள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவை இன்ஸ்டகிரம் சமூக தளத்திலும் வெளியிட்டார். அதில் மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது.

திடீரென்று அதனை நடாலி ஒரு கத்தியை எடுத்து வெட்டுகிறார். அவர் அதை வெட்டும் போதுதான், அது கேக் என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த அளவு அவர் செய்த பாம்பு  வடிவ கேக் தத்ரூபமாக வடிவமைந்துள்ளது. அந்த அளவிற்கு கேக்கை உயிருடன் உள்ள பாம்பு போல தயாரித்துள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். அதன் காரணமாக அவரை ப[பலரும் பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CU5GxqYt-Gw/?utm_source=ig_embed&ig_rid=f712db95-723a-45b9-a88b-07d0e88141cf

 

Leave a Comment