காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!

Photo of author

By Janani

காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!

Janani

காகம் என்பது நவகிரகங்களில் உள்ள சனீஸ்வரர் பகவானின் வாகனம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மேலும் சனீஸ்வரர் பகவான் என்பவர் நாம் செய்த அனைத்து செல்களுக்குமான கர்ம பலன்களை அளிப்பவர். நாம் நல்ல செயல்களை செய்கிறோம் என்றால் நல்ல கர்ம பலனை அளிப்பார். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய கெட்ட செயல்களுக்கு கெட்ட கர்ம பலனையும் தவறாமல் அளிக்க கூடியவரும் இவர்தான்.

சனிப்பெயர்ச்சிகளில் ஏழரை சனி, அஷ்டம சனி என்பது மிகவும் மோசமான சனிப்பெயர்ச்சி என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்த சனிப்பெயர்ச்சியில் தான் நாம் செய்த அனைத்து கெட்ட செயல்களுக்கான தண்டனைகளையும், கெட்ட கர்ம பலன்களையும் அனுபவிக்க கூடிய காலமாக கூறப்படுகிறது. நான் தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்துவிடு, என்று கேட்டாலும் கூட சனீஸ்வரர் பகவான் இறங்கி வர மாட்டார். நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை கண்டிப்பாக கொடுத்தே தீருவார்.

ஆனால் சனி பகவானின் தாக்கத்திலிருந்து சற்று தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. அதுதான் காகத்திற்கு உணவு வைப்பது. தினமும் நாம் சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம் சனிப்பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய சோதனைகளும், தாக்கங்களும் சற்று குறையும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக எச்சில் படாத சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். இல்லை என்றால் அதுவே ஒரு தோசமாக மாறிவிடும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் தினமும் காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம், அவர்களின் பித்ருக்களின் ஆசியுடன் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்க வேண்டும் என்றாலும் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். காகத்திற்கு எச்சில் சாதத்தை வைக்க கூடாது. அதேபோன்று அசைவ உணவினையும் வைக்கக்கூடாது. காகமாகவே எடுத்து உண்கிறது என்றால் அது தவறு இல்லை, ஆனால் நமது கைகளால் அசைவ உணவை வைக்கக்கூடாது.

சனிக்கிழமை நாட்களில் எள் கலந்த சாதத்தினை காகத்திற்கு வைப்பதன் மூலம் சனீஸ்வரர் பகவானின் அருளும் ஆசியும் நமக்கு கிடைக்கும். தயிர் அல்லது பால் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும். பழங்களை காகத்திற்கு வைப்பதன் மூலம் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். எள் மற்றும் புளி என்பது சனீஸ்வரர் பகவானுக்கு ஏற்ற ஒன்று. எனவே புளி மற்றும் எள்ளினால் செய்யப்பட்ட உணவுகளை காகத்திற்கு வைப்பதன் மூலம் சனீஸ்வரர் பகவானின் அருளும் ஆசியும் நிறைவாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோன்று நாம் தினமும் வைக்கக்கூடிய உணவினை காகம் உண்டால் மட்டுமே இத்தனை பலன்களும் நமக்கு கிடைக்கும். மேலும் சனீஸ்வரர் பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும்.