மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி!

மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி!

கொரோனாவின் இரண்டாவது அலையினால் உலகமெங்கும் மக்கள் அவதியுரும் நிலை ஏற்படுகிறது.எல்லா மாவட்டங்களிலும் மக்கள் பல தேவைகளுக்காக அவதியுறுகின்றனர்.

மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் மருத்துவமனைகளில் இருந்து வெளியே வருபவர்களை காட்டிலும், உள்ளே சிகிச்சைக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளதால் மருத்துவர்கள் மற்றும் அரசு என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கமடைந்துள்ளன.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலமான லக்னோவில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.கொரோனா சிகிச்சை மையங்கள் இல்லாததாலும், மருத்துவமனைகளில் சேர வசதி இல்லாததாலும், ஒரு கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வேப்ப மர நிழலில் ஓய்வெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் மிவ்லா கோபால்ஹர் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் பலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துபொருட்கள் இல்லாத சூழ்நிலையால் கிராம மக்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் அதிக பணம் செலவழித்து மருத்துவம் பார்க்க முடியாத அவல நிலையினால் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர்.எங்களை கவனிக்க யாரும் இல்லை எனவும், என் தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை,அவர் வயது 74 எனவும், காய்ச்சல் ஏற்பட்ட 2 நாட்களில் அவர் இறந்து விட்டார் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து கிராம முன்னாள் தலைவர் யோகேஷ் தலன் கூறும்போது, எங்கள் கிராமங்களில் கொரோனா பரிசோதனை செய்வதில்லை எனவும், இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், எங்களிடம் குறைந்த அளவே ஊழியர்கள் உள்ளார்கள் என்று மட்டுமே சொல்கின்றனர் என்று கூறினார்.

இந்த மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தநாத் மூன்றாம் அலைக்கு தயார் என்று கூறிய நிலையில் அந்த மாவட்ட மக்கள் இரண்டாம் நிலையில் ஏற்பட்ட பரிதாப நிலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Leave a Comment