இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வி என்றால், நாம் இறந்த பிறகு நமது ஆன்மா எங்கே செல்லும்? மறுபிறவி என்பது இருக்கிறதா? நாம் மறுபிறவி எடுப்போமா? என்று பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இந்த சந்தேகங்களுக்கு பல விஞ்ஞானிகளால் கூட பதிலை கொடுக்க முடியவில்லை.
ஆனால் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்பு வெளியான கருத்துக்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான புனித புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பாடாக இருந்தது. அப்படி இறப்புக்குப் பிறகு என்ன தான் நடக்கும்? நமது ஆன்மா எங்கே செல்லும்? என்ற சந்தேகங்கள் குறித்த விளக்கத்தினை தற்போது காண்போம்.
இந்த சந்தேகம் குறித்த கேள்விக்கான விளக்கத்தை கிறிஸ்துவ புத்தகமான ஹோலி பைபிளில் கூறப்பட்டதாவது, ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மா ஓய்வு நிலையில் தான் இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு தான் அந்த மனிதன் நல்லது செய்திருந்தால் அந்த ஆன்மா சொர்க்கத்திற்கும், கெட்டது செய்திருந்தால் நரகத்திற்கும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்து புராணங்களின்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் செய்த நல்லது கெட்டதை கணித்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை ஆராய்வார்கள். இவ்வாறு சிறிது காலம் சொர்க்கம் அல்லது நரகத்தில் இருந்த பிறகு, அந்த ஆன்மாவானது மீண்டும் ஒரு மனிதனின் உடலிலோ அல்லது மிருகங்களின் உடலிலோ செல்லும்.
ஆனால் விஞ்ஞானிகள், ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். ஒரு மனிதனின் இதயத்துடிப்பு நின்ற பிறகு அவனது மூளையானது ஐந்து நிமிடம் மட்டும் தான் வேலை செய்யும் என்பதை கண்டறிந்த நிலையில், தற்போது ஆராய்ச்சியானது மனிதனின் மூளை சில மணி நேரத்திற்கு வேலை செய்யும் என்பதை கண்டறிந்து உள்ளது.
எனவே ஒருவர் இறந்த உடனேயே அவரது ஆன்மாவானது உடலை விட்டு வெளியேறாது. அவரது உள் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் அந்த ஆன்மாவானது அந்த மனித உடலில் தான் இருக்கும். ஒருவர் இறந்த பிறகும் அந்த உடலில் இருக்கக்கூடிய உள்ளுறுப்புகள் சில மணி நேரத்திற்கு இயங்கிக் கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு உறுப்பாகத்தான் செயல் இழக்க தொடங்கும். எனவே அது வரையில் அந்த ஆன்மாவானது அந்த உடலில் இருக்கும் என்பதை கண்டறிந்துள்ளனர்.
ஒருவரது இதயத்துடிப்பு நின்ற பிறகு அவர் இறந்துவிட்டதாக நாம் கருதுவோம். ஆனால் அவர்கள் மயக்க நிலையில் இருப்பது போன்ற உணர்வை தான் பெற்றிருப்பார்கள். அதாவது அவர்கள் இறந்த பிறகு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர்களால் உணர முடியும் என்றும் கூறுகின்றனர்.
ஒருவர் இறந்த பிறகு அவரது நினைவுகள் மற்றும் சுற்றி நடக்கக் கூடியதை உணரக் கூடிய தன்மையும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒருவரது ஆன்மாவை இன்னொருவரால் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் அந்த ஆன்மாவானது ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மாறும் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு அறிவியல் ரீதியான உண்மைகள் இன்னும் கிடைக்கவில்லை.
இறந்த ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற போது அவர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இறந்தவர்களை யாரோ ஒருவர் மேலே கூட்டி சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். அது இந்து சாஸ்திரத்தின் படி எமதூதனாக இருக்கலாம் அல்லது கிறிஸ்துவ சாஸ்திரத்தின் படி தேவ தூதர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கும் அறிவியல் ரீதியான முடிவுகள் கிடைக்கவில்லை.