என்ன விளாடிமிர் புட்டினுக்கு ரத்த புற்றுநோயா? உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Sakthi

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களை கொள்வதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்தன .

அவருடைய வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் தலைவர் கைரைலோபுடானோவ் தெரிவித்ததாவது, ஐரோப்பிய மற்றும் ஆசியாவுக்கு இடையே இருக்கின்ற கருங்கடலுக்கும், ரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்குமிடையே இருக்கின்ற காகசஸ் என்ற இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களை கொல்வதற்கு முயற்சி நடைபெற்றது.

பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இந்த முயற்சி நடைபெற்றது. அதில் ரஷ்ய அதிபர் மீது தாக்குதல் நடந்தது ஆனால் அவர் உயிர் தப்பி விட்டார் என்று அவர் கூறியிருக்கிறார்.