காகத்திற்கு உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?! இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

Photo of author

By Janani

காகத்திற்கு உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?! இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

Janani

Updated on:

What is the benefit of feeding a crow?! Can you get so many benefits?!

இந்த உலகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்களுள் ஒரு தெய்வத்தின் பெயரை சொன்னால் அனைவரும் தொடை நடுங்கி போவார்கள். அந்த தெய்வம் தான் சனீஸ்வரர். இந்த சனீஸ்வரனின் தோஷத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது அவரை எவ்வாறு வழிபடுவது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சனீஸ்வரர் 12 ராசிகளையும் சுற்றி வருபவர். அதுமட்டுமின்றி அனைவருடைய ஜாதகத்திலும் ஏதேனும் ஒரு திருப்புமுனையாகவே அவர் இருப்பார்.

எனவே அனைவரும் இந்த சனீஸ்வரர் பகவானை வழிபட்டு வர வேண்டும்.
நமது வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும், நாம் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்றால் மற்ற தெய்வங்களை வழிபட்டு வருகிறோமோ இல்லையோ கண்டிப்பாக சனீஸ்வரர் பகவானை வழிபட்டால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். ஏனென்றால் சனீஸ்வரர் பகவான் ஒரு பக்த பிரியர் ஆவார்.

சனீஸ்வரரின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணினால், அவரது அணுக்கிரகத்தை நமக்கு கொடுப்பதற்கு முன்பாக நம்மிடம் காகத்தின் ரூபத்தில் வந்து நம்மை சோதித்துப் பார்ப்பார்.
அவருடைய ஆசியை பெறுவதற்கு நாம் தகுதியானவரா என்று நம்மை சோதித்த பின்னரே நமக்கான பலனை அவர் அளிப்பார். ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி என்று பலவிதமான சனி தோஷங்கள் இருக்கின்றன அதனை நீக்குவதற்கு சனீஸ்வரர் பகவானை மனதார உருகி வேண்டி வந்தாலே அவர் நமக்கு வேண்டியதை கொடுப்பார்.

இவரை வழிபட்டு வரும் பொழுது முதலில் பித்ரு தோஷத்தினை நீக்கி தருவார். அதன் பிறகு வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டுமோ அதனை நிறைவேற்றி தருவார். இந்த சனீஸ்வரனின் அருளை பெறுவதற்கு நாம் முதலில் காகத்திற்கு தினமும் சாதம் வைக்க வேண்டும். சாதம் மட்டும் அல்லாமல் நாம் உண்ணக்கூடிய அனைத்து பொருட்களையும் காகத்திற்கு உணவாக வைக்கலாம்.

ஒரு பொருளை காகம் சாப்பிடாவிட்டால் அடுத்த நாள் வேறு ஒரு பொருளை காகத்திற்கு வைக்கலாம். நாம் எவ்வாறு விதவிதமாக சமைத்து உண்கிறோமோ அதே போன்று காகத்திற்கும் உணவினை வைக்கலாம். இவ்வாறு தினமும் காகத்திற்கு உணவினை வைத்து மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் சனீஸ்வரன் பகவானின் அருளை நாம் பெற முடியும்.
நமது ஜாதகத்தில் குருவின் பார்வை நமக்கு நன்றாக இருந்தாலும் கூட ஏழரை சனி, கண்டக சனி இதுபோன்ற சனி தோசங்கள் நமக்கு நடக்கும்.

எனவே அனைத்து தெய்வங்களை காட்டிலும் சனீஸ்வரன் பகவான் என்பவர் மிகவும் முக்கியமானவர். நமக்கு தோஷங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நமக்கு வேண்டியது நடக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் சனீஸ்வரன் பகவானை தினமும் வழிபட்டு அவரின் பக்தராக இருந்தாலே கண்டிப்பாக அனைத்தும் நடக்கும்.