சென்னையில் திடீரென கனமழை பெய்தது ஏன்? காரணத்தை போட்டுடைத்த வானிலை ஆய்வு மையம்!

0
101

இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் வானிலை வறண்ட நிலையிலேயே காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து கனமழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழைக்கான காரணம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது,

அவர்கள் தெரிவித்ததாவது, வளிமண்டலத்தில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கடல் பகுதியில் காலை வரை இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. அது குறைந்த சமயத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அந்த சமயத்தில் மேகக்கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால், இந்த திடீர் கனமழை பெய்தது இந்த மேகக்கூட்டங்கள் நீடிக்கும் வரையில் சென்னைக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் அதிகமான ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.