உள்ளங்கை அரித்தால் உடலில் ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கலாம் அல்லது உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று மருத்துவம் ரீதியாக காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் ஆன்மிகம் ரீதியாக உள்ளங்கை அரித்தால் அதிலும் ஆண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால் வரவு ஏற்படுவதாகவும், கொடுத்த கடன் திரும்ப நமது கைக்கு வருவதாகவும் அர்த்தம். அதேபோன்று பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் அவர்களது கைக்கு வரவு வருவதாக அர்த்தம்.
ஆடைகள் அல்லது ஆபரணங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் அதற்கான வாய்ப்பு கிடைக்கப் போவதாக பெண்களின் இடது உள்ளங்கை அரித்தால் அர்த்தம். அதேபோன்று உங்களின் நெருங்கிய உறவுகள் உங்களை காண வருவதாகவும் அர்த்தம் கூறப்படுகிறது. இவ்வாறு சாதாரண உள்ளங்கை அரித்தால் கூட அதில் பல சூட்சமங்கள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஆண்களுக்கு இடது உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு துரதிஷ்டம் வருவதாக அர்த்தம். அதாவது அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தை செலவு செய்யப் போகிறார்கள் என்று அர்த்தம். அதற்கான வாய்ப்பும் அவர்களைத் தேடி வரும். பணத்தை தெரியாத ஒருவருக்கோ அல்லது நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளிலோ செலவிடப் போவதாக அர்த்தம். அடிக்கடி ஆண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் உங்களை விட்டு செல்வதாக அர்த்தம்.
பெண்களுக்கு வலது உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் வரப்போகிற பண இழப்பை குறிக்கிறது. இவ்வாறு அரிப்பு ஏற்படும் பொழுது சொறிவதை முடிந்த அளவிற்கு தவிர்த்துக்கொள்ள வேண்டும். வீண் செலவுகள் வீண் விரயம் இது போன்ற செயல்கள் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிப்பது தான் இந்த வலது உள்ளங்கையின் அரிப்பு.