வாராக் கடன் விரைவில் வசூல் ஆக மற்றும் கடன் தொல்லை நீங்க என்ன வழி..??

Photo of author

By Janani

வாராக் கடன் விரைவில் வசூல் ஆக மற்றும் கடன் தொல்லை நீங்க என்ன வழி..??

Janani

இந்த உலகில் மிச்சம் வைக்க கூடாதவை என மூன்று பொருட்கள் உள்ளன. அவை நெருப்பு, பகை, கடன். நெருப்பை மிச்சம் வைத்தோம் என்றால் அது காற்றில் பரவி பெரும் நெருப்பாக மாறிவிடும். அதேபோன்றுதான் பகையை வளர விட்டோம் என்றால் அது நம்மை அழிக்கக்கூடிய பகையாக மாறிவிடும். கடனை மிச்சம் வைத்தோம் என்றால் அது நமது வாழ்க்கையையே அழித்துவிடும்.

ஒருவர் கடனை வாங்கும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துப் பார்த்து வாங்க வேண்டும். எவ்வளவு கடன் வாங்கினால் நம்மால் அடைக்க முடியும்? கண்டிப்பாக நம்மால் அடைத்து விட முடியுமா? என்பதை எல்லாம் யோசிக்க வேண்டும். அதேபோன்று கடன் கொடுப்பவர்களும் நியாயமான வட்டியில் கொடுத்தால்தான் அவர்கள் கொடுத்த பணமும் வசூல் ஆகும். வாங்கியவர்களும் எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் திரும்ப கொடுக்க முடியும்.

அமாவாசை, அஷ்டமி ஆகிய திதிகளில் கடன் வாங்க கூடாது. கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, விசாகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் கடன் வாங்கக்கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய நட்சத்திரங்களின் போது மற்றவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது.

ஆனால் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நல்ல நாட்களில் ஒரு நாளில் தேவையான பணத்தை எடுத்து கல்லாப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வைத்துக் கொண்டால் இந்த கடன் கொடுக்கக் கூடாத நட்சத்திரங்களின் போது இதில் இருந்து எடுத்து கொடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு கொடுக்கும் பொழுது எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பணத்தை வசூலித்து விடலாம்.

பணம் அனைத்தையும் மொத்தமாக ஒரு இடத்தில் வைத்திருப்போம், அந்த இடத்தில் இருந்து தான் இந்த நட்சத்திர நாட்களில் பணத்தை எடுத்துக் கொடுக்கக் கூடாது. அந்த மொத்த பணத்தில் இருந்து சிறிய அளவில் எடுத்து நமது கல்லாப்பெட்டியில் வைத்துக் கொண்டால், அனைத்து நாட்களிலும் அந்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இவர்களது தொழில் என்பதே இதுதான். எனவே இவ்வாறு செய்து கொள்வது மிகவும் சிறப்பு. அதே போன்று செவ்வாய்க்கிழமை என்பது கடனை அடைப்பதற்கு என விளங்குகிறது. எனவே செவ்வாய்க்கிழமைகளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், சிறிய அளவிலாவது நமது கடனை கொடுத்து விட்டோம் என்றால், நமது கடன் முழுவதையும் விரைவில் அடைத்து விடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமையில் கடனை கொடுக்க முடியாதவர்கள், செவ்வாய் ஹோரை மற்றும் குளிகை நேரங்களில் நமது கடனை அடைத்துக் கொள்ளலாம். அதேபோன்று திங்கள்கிழமை, வியாழன் கிழமை, வெள்ளிக்கிழமை இது போன்ற நாட்களில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த நாட்களில் கடன் வாங்கினாலும் நமது கடனை விரைவில் அடைத்து விடலாம்.

கொடுத்த கடன் திரும்ப வரவில்லை என்றால் கால பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்க கால பைரவரை ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் வழிபட வேண்டும். இல்லையென்றால் தேய்பிறை அஷ்டமி நாளன்று இவரை வழிபடலாம்.

இவரை வழிபடும் பொழுது நல்லெண்ணெய் தீபத்தில் 27 மிளகினை சிவப்பு நிற துணியில் கட்டி, அந்த தீபத்தின் உள்ளே போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது வாராக்கடன் திரும்ப நமது கைக்கு வரும். இந்த தீபம் ஏற்றும் பொழுது எனது பணம் திரும்ப எனது கைக்கு வர வேண்டும் என்று மனதார நினைத்து, குங்குமத்தை அந்த விளக்கை சுற்றி வட்டமாக போட வேண்டும்.

அதேபோன்று 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் முருகருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வந்தால் நாம் கொடுத்த பணம் நமது கைக்கு வரும்.