கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் பாரஸ்ட் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியில் இருந்து விலகினார் அதன் பிறகு அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இங்கிலாந்து நாட்டு சட்டப்படி ஆரம்பிச்சியின் தலைவரே இங்கிலாந்தின் பிரதமராக இருப்பார் அதன்படி ஆதம் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோரிடையே போட்டி ஏற்பட்டது. இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷிசுனக்குக்கு முதலில் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது. ஆனாலும் சில காரணங்களால் அவருடைய ஆதரவு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது இதனால் அப்போது நடைபெற்ற தேர்தலை லிஸ்ட் ட்ரஸ் இங்கிலாந்து பிரதமர் ஆனார். அவரை கடந்த மாதம் பிரிட்டன் மகாராணி எலிசபெத் பிரிட்டன் பிரதமராக நியமனம் செய்தார். ராணி எலிசபெத் நியமனம் செய்த கடைசி பிரதமர் இவர்தான்.
ஆனாலும் இவர் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதில்லை ஆகவே இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினர் அதோடு கட்சிக்கு உள்ளேயும் அழுத்தம் அதிகரித்தது இதனைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் நேற்று இவர்கள் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். சரி இதற்கான காரணத்தை பார்க்கலாம்.உக்ரைன் போர் காரணமாக எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்க தொடங்கிய ஆகவே இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் புதிய சட்டத்தை கொண்டு வந்தார் ஆனாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மினி பட்ஜெட் ஒன்று அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களில் 67 பில்லியன் செலவில் எரிசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டவுடன் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கு நடுவே திடீரென்று வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் புதிய பிரதமர். இது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு பலன் அளிப்பதாக இருந்தது.
அதோடு இந்த திடீர் அறிவிப்பு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கியது பிரிட்டன் பவுண்ட் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைய தொடங்கியது இது அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது அதோடு சில வரி குறைப்புகளை புதிய பிரதமர் அறிவிக்க இருந்த போதிலும் அழுத்தம் அதிகரித்ததால் வேறு வழி இன்றி அவர் வருமான வரி குறைப்பு விவகாரத்தில் யூட்டன் அடித்தார். இது அவருக்கு விழுந்த பெரிய அடியாக கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சில தினங்கள் இடைவெளியில் இரு அமைச்சர்கள் பதவி விலகினர். இதுவும் அவருக்கு அழுத்தத்தை கொடுத்தது. ஆனாலும் தான் ஒன்றும் தோல்வி கண்டு ஓடுபவர் அல்ல என்றும், கடைசி வரையில் களத்தில் நின்று போராடுபவர் எனவும் அவர் கடந்த புதன்கிழமை தான் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்கு மறுநாளே அவர் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து பொருளாதாரம் மீது அடுத்தடுத்து அடி விழுந்தது. ஆகவே புதிய பிரதமர் மீது சொந்த கட்சியை சார்ந்தவர்களே நம்பிக்கை இழந்தனர். அதோடு நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக கூட பரிசீலனை செய்யப்பட்டது. நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தால் தன்னுடைய பிரதமர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்து அவர் தன்னுடைய பிரதமர் பதவியை தானே ராஜினாமா செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.