குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!

Photo of author

By Sakthi

குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!

Sakthi

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சார்ந்த சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் 3 நாட்களுக்கு முன்னர் அங்கு இருக்கும் சிராவர் என்ற கிராமத்தில் இருக்கின்ற குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அந்த அந்த சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் இருந்து பதற்றத்துடன் வந்து சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சிறுவனின் உடலை மீட்டு கதறி அழுதனர். அந்த சமயத்தில் அவர்கள் திடீரென்று 10 கிலோ உப்பை கொண்டு வருமாறு அவர்களுடைய உறவினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் எதிர்மனையில் எதற்காக என்று கேட்டபோது எதுவும் தெரிவிக்காமல் எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார்கள்.

அவர்களும் 10 கிலோ உப்பை கொண்டு வந்தனர் அதனை வாங்கிய பெற்றோர் உப்பை கீழே கொட்டி அதன் மேல் சிறுவனை படுக்க வைத்து, அதன் பிறகு மீதி உப்பையும் சிறுவன் மேல் கொட்டினர்.

இது போன்ற செய்தால் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள் என்று வாட்ஸ் அப் மூலமாக செய்தி வந்ததாக தெரிவித்தார்கள். அதன் பிறகு அவர்கள் சுமார் 6 மணி நேரம் வரையில் காத்திருந்தனர். ஆனாலும் சிறுவன் உயிர்த்தெழவில்லை.

இதற்கு நடுவே கிராம மக்கள் காவல்துறைக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் மருத்துவர்களும் சிறுவனின் உடலை சோதனை செய்து சிறுவனுக்கு உயிரில்லை என்பதை உறுதி செய்து விட்டார்கள்.

இதனை எடுத்து சிறுமியின் உடல் இறுதிச்சடங்குடன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது மகன் உயிர் படைப்பான் என்ற நம்பிக்கையுடன் மூடநம்பிக்கையை பின்பற்றிய பெற்றோரின் செயல் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியது.