ஒவ்வொரு நாளிற்கும், ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு சிறப்பம்சம் என்பது கண்டிப்பாக இருக்கும். அந்தந்த நாளிற்கு உரிய தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதேபோன்று “தேவதை வசிய நாள்” என்ற ஒரு சிறப்பம்சம் கொண்ட நாட்களும் உள்ளது. இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், கண்டிப்பாக நாம் வேண்டியது நடக்கும்.
இத்தகைய அதிர்ஷ்டம் நிறைந்த தேவதை வசிய நாள் நாளைய தினமான வெள்ளிக்கிழமை (4.4.2025) வருகிறது. இந்த நாளில் நமக்கு வேண்டியதை இந்த பிரபஞ்சத்திடம் கேட்கும் பொழுது, கண்டிப்பாக அதனை நிறைவேற்றி தரும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வரக்கூடிய 4:44 மணியையும், மாலை நேரத்தில் வரக்கூடிய 4:44 மணியையும் தவற விடாதீர்கள். உங்களுக்கு எந்த தேவைகள் நிறைவேற வேண்டுமோ அதனை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிரபஞ்சத்திடம் நமக்கு வேண்டியதை இன்றைய தினம் கேட்க இரண்டு வாய்ப்புகள் உள்ளது. இதில் ஒரு வாய்ப்பினை தவறவிட்டாலும் கூட, இரண்டாவது வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நமக்கு தேவையான வழிபாட்டை செய்வதற்கு ஒரு பிரியாணி இலை மற்றும் ஒரு பேனா இருந்தால் போதும்.
இந்த வழிபாட்டு முறையை செய்வதற்கு எந்த ஒரு தீட்டு, சாங்கியம், சம்பிரதாயங்கள் என எதுவும் கிடையாது. அசைவம் சாப்பிட்டு இருந்தாலும், மாதவிடாய் காலங்களிலும் இதனை செய்து கொள்ளலாம். இதனை குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. எனவே குடும்பத்தில் உள்ள அனைவரும் இதனை செய்து கொள்ளலாம்.
பணம், புகழ், ஆரோக்கியம், வேலை, படிப்பு, திருமணம், குழந்தை பேறு, வழக்குகளில் வெற்றி, வாழ்க்கையில் முன்னேற்றம் இது போன்ற எது சம்பந்தமாக நாம் வேண்டிக் கொண்டாலும் கண்டிப்பாக அது நிறைவேறும்.
உங்களுக்கு என்ன தேவைகள் நிறைவேற வேண்டுமோ அதனை மேலே குறிப்பிட்ட நேரத்தின் பொழுது, பிரியாணி இலையில் உங்களுக்கு வேண்டியதை நான்கு முறை எழுத வேண்டும். இப்பொழுது எழுதியதை வலது கையில் வைத்துக் கொண்டு, மனதார இந்த பிரபஞ்சத்திடம் நான்கு நிமிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை கொண்டு எரித்து விட வேண்டும். இப்பொழுது எரித்த அந்த சாம்பலை வீட்டிற்கு வெளியே சென்று நமது உள்ளங்கையில் வைத்து ஊதி விட வேண்டும். இப்பொழுது நாம் வேண்டி எழுதிக் கொண்ட அந்த வேண்டுதலை, பிரபஞ்சத்திடம் அனுப்பியது போன்று அர்த்தம் கொள்ளப்படும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு மேலே குறிப்பிட்ட நேரம் என்பது மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று.