கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வாட்ஸ்அப் செய்த செயல்! அதிர்ந்த பயனர்கள்!

Photo of author

By Hasini

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வாட்ஸ்அப் செய்த செயல்! அதிர்ந்த பயனர்கள்!

கடந்த 2020 டிசம்பர் முதலே வாட்ஸ்அப் நிறுவனம் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள தனது பயனர்களை கட்டாயப்படுத்தி வந்தது. அதற்க்கு காரணம் மத்திய அரசு வெளியிட்ட தகவல் உரிமை சட்டமே ஆகும். அதன் காரணமாக பல பயனர்கள் அதை யோசிக்க ஆரம்பித்த நிலையில், கடந்த மாதம் ஒரு ஒரு அறிக்கையை இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

மேலும் அதில், பயனர்களின் தகவல்கள் எதுவும் தாய் கணக்கான முகநூளில் பதிய மாட்டோம் என உறுதி செய்தது. மேலும் பயனர்களை தங்கள் கொள்கைகளை ஏற்க கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும், தகவல் உரிமை சட்டம் அமலுக்கு வரும் வரையில், நாங்களும் அமைதி காப்போம் என கூறி இருந்தது. இந்நிலையில் தற்போது 20 லட்சம் பயனர்களின் கணக்கை முடக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் சமூக வலைத்தள நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் கடந்த மே மாதம் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்துள்ளோம் தேவையற்ற மற்றும் வன்முறை தூண்டும் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

அதன்படி மே 15 முதல் ஜூன் 15 வரை நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேவையற்ற வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்கள் பரிமாற்றம் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நாங்கள் முடக்கியுள்ளோம். சர்வதேச அளவில் மாதந்தோறும் இதுபோல் 8 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.