கோதுமை மாவு இருந்தா போதும் செம டேஸ்டான சிம்பிளான அல்வா செய்யலாம்..!!

Photo of author

By Priya

Wheat halwa recipe in tamil: அல்வா என்றாலே அனைவருக்கும் ஒரு பிடித்தமான இனிப்பு. அல்வா என்று சொன்னவுடனே அனைவரின் நாக்கிலும் எச்சி ஊறும். ஏனென்றால் அந்த அளவிற்கு அல்வா ஒரு சில நபர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அல்வா செய்வது மிகவும் கடினமான ஒரு வேலை என்று நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை வீடுகளில் செய்து பார்க்க மாட்டார்கள். கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் கோதுமை மாவு இருந்தால் குறைந்த நேரத்தில் சுவையான ஹெல்தியான ஆல்வா செய்ய முடியும். இந்த பதிவில் கோதுமை மாவை வைத்து செம்ம டேஸ்டியான அல்வா குறைந்த நேரத்தில் எப்படி செய்யலாம் (Godhumai halwa seivathu eppadi) என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு -1 கப்
சர்க்கரை -1 கப்
நெய் -1 கப்
முந்திரி திராட்சை- தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் எடுத்து வைத்துள்ள ஒரு கப் சர்க்கரையை போட்டு கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எடுத்து வைத்துள்ள ஒரு கப் கோதுமை மாவை இரண்டு நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே கடாயில் எடுத்து வைத்துள்ள ஒரு கப் நெய்யில் பாதி அளவு நெய் ஊற்றி வறுத்த கோதுமை மாவை அதில் போட்டு கிளறி விட வேண்டும்.

இவ்வாறு கிளறிக் கொண்டு இருக்கும் பொழுது தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கோதுமை மாவு சுருண்டு அல்வா போல வரும் பொழுது எல்லா சர்க்கரை நீரையும் சேர்த்து நன்றாக சுருள கிளற வேண்டும்.

பிறகு எடுத்து வைத்துள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி கொண்டு இருக்க வேண்டும். இப்பொழுது கடாயில் ஒட்டாமல் அல்வா தயாராகி வரும். இந்த சமயத்தில் முந்திரி, திராட்சை, நெய்யில் பொறித்து அல்வாவில் போட்டால் சுவையான கோதுமை மாவு அல்வா தயார்.

மேலும் படிக்க: முட்டை இருந்தா போதும் சுவையான எக் லாலிபாப் செய்யலாம்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!