State

மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய மாநில அரசு:! எப்பொழுதிலிருந்து இயங்குமென்று தெரிந்து கொள்ளுங்கள்!

மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய மாநில அரசு:! எப்பொழுதிலிருந்து இயங்குமென்று தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனாத் தொற்று காரணத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து போக்குவரத்துகளும் மத்திய மாநில அரசுகளால் முடக்கப்பட்டது.மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு
தளர்வுபடுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுபடுத்தப்பட உள்ளதால்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் என்று மத்திய மாநில அரசுகள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருந்தபொழுதிலும் மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு,மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பின்பே இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவைகளை இயக்கினாலும்,பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்குமென்றும் மத்திய மாநில அரசு
சார்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment