5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தப்படுவது எப்போது? இன்று முக்கிய முடிவை அறிவிக்கப் போகும் மத்திய அரசு!

0
103

இந்தியாவில் நோய்த்தொற்று கடந்த 2 ஆண்டு காலமாக அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஆகவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என்ற அங்கீகாரம் பெற்றது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்காக திட்டத்தை மத்திய, மாநில. அரசுகள் தொடங்கியது.

ஆனால் தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்று தடுப்பூசிக்கு பொது மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவி வந்தது.

இந்த நிலையில், மெல்ல,மெல்ல, இந்த தடுப்பூசிக்கு பொதுமக்களிடையே இருந்து வந்த பயம் விலகியது. தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொள்ளத் தொடங்கினர்.

ஆகவே இந்த தடுப்பூசியின் விளைவாக இந்தியாவில் நோய் கட்டுப்பாடு குறைய தொடங்கியது. ஆனாலும் தற்போது மீண்டும் இந்தியாவில் நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது எனவும், சொல்லப்படுகிறது.

ஆகவே தற்போது நாட்டிலுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 84 சதவீதத்தினருக்கு 2 தவணைகள் செலுத்தியிருந்தாலும், இயற்கையான நோய்த்தொற்றின் மூலமாகவும் பெரும்பாலானோருக்கு நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இதனை மேலும் அதிகரிக்கும் விதத்தில் தற்சமயம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2வது தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆன பிறகு பூஸ்டர் டோஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. ஆகவே குழந்தைகள் தான் நோய் எதிர்ப்பு சக்தி பெறாத நிலையில் இருக்கிறார்கள்.

அதுவும் தற்சமயம் பள்ளிக் கூடங்கள் திறந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிற போது பல பகுதிகளில் குழந்தைகள் நோய்களுக்கு ஆளாவது பெற்றோர்களை தவிப்பிற்கு ஆளாக்கியிருக்கிறது குழந்தைகளுக்கு தடுப்பூசி தான் நோய் தொற்றுக்கு எதிரான கேடயம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சியின் மூலமாக கலந்துரையாடிய போது மிக விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அரசின் முன்னுரிமை என்று தெரிவித்தார்.

இதற்கு நடுவில் 5 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்களுக்காக பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகள் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர பயன்பாட்டு அனுமதியை 26ம் தேதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிப்பது எப்போது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையினடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் இன்று தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பாக விவாதம் செய்து முடிவு மேற்கொண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇப்படியும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியுமா? . திருப்பதி திருமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு.
Next articleபிரபல வில்லன் நடிகர் காலமானார்! கவலையில் தமிழ் திரையுலகம்!