ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Photo of author

By Sakthi

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Sakthi

ருத்ர தண்டவம் திரைப்படத்தின் தன்னுடைய முன்பதிவு முடிந்து விட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

சென்ற வருடம் நாடகக் காதலை கருவாக வைத்து சென்ற ஆண்டு திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனர் மோகன் ஜி இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இவ்வாறு தற்போது தன்னுடைய மூன்றாவது திரைப்படமாக ருத்ர தாண்டவம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார் இந்த திரைப்படத்தில் திரெளபதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷி அவர்களே நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். அதோடு இந்த திரைப்படத்தில் கேஜிஎப் நடிகை மாளவிகா அவினாஷ் டத்தோ ராதாரவி, போன்றோரும் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இயக்குனர் கௌதம் மேனன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தர்ஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ருத்ரதாண்டவம் திரைப்படம் டப்பிங் பணிகளை முடித்து விட்டேன் என்றும் அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.