தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவது எப்போது? ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்ட அதிரடி தகவல்!

0
144

இந்த வருடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி அதன்மூலமாக நிரப்பி வருகிறது. இந்த தேர்தலில் ஆசிரியர் தகுதி தேர்வு மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.

இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தேர்வாகும்.

தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விருப்பம் கொண்டவர்கள் கட்டாயமாக இந்த தேர்வை எழுதி ஆகவேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் உள்ளிட்ட படிப்புகளை படித்து முடித்துவிட்டு அனேக நபர்கள் இந்த தகுதித் தேர்வு எப்போது வரும் என காத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த வருடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்டு உள்ளிட்ட மாதங்களில் 2 கட்டங்களாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு இதுவரையில் எழுத்துத் தேர்வில் நடந்த இந்த தேர்வு தற்சமயம் சி.பி.டி முறையில் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கின்ற 9,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு TET தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருக்கின்ற நிலையில் எல்லோருக்கும் சிபிடி விரைவில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி இருக்கின்ற பள்ளிகள் கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகின்றது.

அதேபோன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிரத்தியேகமான மென்பொருள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

Previous articleஉடன் பணிபுரிந்தவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற சக பணியாளர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
Next articleபேரதிர்ச்சி! இந்தியாவில் 8000த்தை கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!