மீனவர்களே இந்தப் பகுதிகளுக்கு மட்டும் தயவுசெய்து செல்லாதீர்கள்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

வானிலை வரலாற்றில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தில் மழை பெய்து வருவதாக பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக பிப்ரவரி, மார்ச், மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் அதே நேரம் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலை வேளைகளில் எந்த அளவிற்கு பனிப்பொழிவு இருக்கிறதோ அதே போல பிற்பகலுக்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனாலும் தற்சமயம் இது மாறுபட்டிருக்கிறது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு தமிழக பகுதிகளை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 130 வருடங்களில் 5 புயல்களும், 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உள்ளிட்டவை வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கிறது. 1938-ல் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையையும், கடந்த 1994ஆம் வருடம் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் உள்ளிட்ட தினங்களில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் 65 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசும் என்ற காரணத்தால், தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.