எங்கே சென்றார் விஜய்? ரசிகர்களின் பரபரப்பான தேடல்!
சமீப காலமாகவே நடிகர் விஜய் அவர் பேசாமல் கருத்துக்கள் மூலமாகவே பேசி வருகின்றார். சட்டசபை தேர்தல் நடைபெற்ற சமயத்தில் சைக்கிளில் வந்து தன்னுடைய வாக்கை செலுத்தி விட்டு சென்றார்.
அங்கு சமயத்தில் அவர் வாக்குச்சாவடி மையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், காரில் வராமல் சைக்கிளில் சாதாரணமாக வந்து வாக்கு சேர்த்து விட்டு சென்றாலும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை நினைவு படுத்துவதற்காக தான் அவர் சைக்கிளில் வந்தார் என்று அவருடைய ரசிகர்கள் கொளுத்திப் போட தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின்னர் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் விக்ரம், சூரி போன்றோர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள் ஆனால் விஜய் தமிழக முதல்வரை இதுவரை நேரில் சந்திக்கவில்லை தற்சமயம் நோய்த்தொற்று பரவல் நிவாரண நிதிக்காக தமிழக முதலமைச்சர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து திரையுலகில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நிவாரண நிதி உதவி புரிந்தார்கள். சிவகார்த்திகேயன் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து நிதியை கொடுத்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இதுவரையில் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை செய்தபோது பல அரசியல் மக்கள் நல்ல கருத்துக்களை திரையிலும் ஆடியோ மூலமாகவும் வெளியீட்டு விழாக்களிலும் தெரிவிக்கும் விஜய் இப்போது எங்கே என்ற கேள்வி அவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை செய்தபோது ஈசிஆர் ரோட்டில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் வசித்து வரும் நடிகர் விஜய் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்களிப்பதற்காக வெளியில் வந்து விட்டு மறுநாள் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தன்னுடைய 65ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டில் சென்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அங்கே நடிகை பூஜா ஹெஹ்டேவுடன் பாடல் காட்சியில் மற்றும் சில காட்சிகள் படப்பிடிப்பு போன்றவற்றை முடித்து விட்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சென்னை வந்தார் என்று சொல்லப்படுகிறது.
அதோடு அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்ததன் காரணமாக, தனிமையில் இருந்து வருகிறார்.அப்போதுதான் அவருடன் நடித்த நடிகை பூஜா ஹெக்டே வுக்கு இருமல் காய்ச்சல் போன்றவைகள் இருந்ததன் காரணமாக, நோய்த் தொற்று பரிசோதனை எடுத்துப் பார்த்ததில் நோய்த்தொற்று பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. விஜய்யை தொடர்பு கொண்டு தனக்கு பாசிட்டிவ் வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்த விஜய் தன்னை தீவிரமாக தனிமை படுத்தி கொண்டே குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி மூச்சுப்பயிற்சியும் கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
தற்போது நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதன் வீரியமும் அதிகமாக இருப்பதாலும், வெளியே வருவதை தவிர்த்து மருந்து செய்து நிறைவாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து நோய்த்தொற்று நிதியையும் வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.