உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

Photo of author

By Janani

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

Janani

ஒருவர் அவரது ராசிக்கு ஏற்ற குறியீடுகளை அணிந்து கொள்வதன் மூலம் பல அதிர்ஷ்டங்களை பெற முடியும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் இந்த குறியீடுகளை நமது உடம்பில் படும்படி அணிந்து கொள்வது பல யோகங்களை தரும் என்றும் கூறப்படுகிறது.

உதாரணமாக மீனம் ராசிக்காரர்கள் மீனின் படத்தை அடிக்கடி பார்ப்பதும், மீன் தொட்டிகளை வைத்து வளர்ப்பதும், மீன் சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் அதிர்ஷ்டத்தை தரும். இதுபோலவே ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்தந்த ராசிக்கு ஏற்ற குறியீடுகளை பயன்படுத்துவது உத்தமம்.

அதேபோன்று நட்சத்திரங்களுக்கு ஏற்ற விருட்சகங்களும், நட்சத்திர சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் பல யோகங்களை தேடித் தரும். பொதுவாக ஓம், வேல், திரிசூலம் இது போன்ற சின்னங்களை டாலராக கழுத்தில் அணிந்து வருபவர்களுக்கு அதிக மன வலிமை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் நாம் அணிந்து கொள்ள கூடிய சாமி டாலர் நமது ராசிக்கு எவை அதிர்ஷ்டத்தை கொடுக்கும், எந்த சாமியின் படத்தை டாலராக நமது கழுத்தில் அணிந்து கொண்டால் நமக்கு யோகத்தை கொடுக்கும் என்பது குறித்த விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம்.

1. கும்பம் ராசி:
கும்ப ராசிக்காரர்கள் விருட்சங்கள் அதாவது மரங்கள் பொறித்த சின்னங்களை தாராளமாக அணிந்து கொள்ளலாம். அதேபோன்று இலைகள், பூரண கும்பம் இது போன்ற சின்னங்களை அணிந்து கொள்வதும் யோகங்களைத் தரும்.

2. ரிஷபம் ராசி:
ரிஷபம் ராசிக்காரர்கள் மகாலட்சுமி தாயின் சின்னம் பொறித்த டாலரை வெள்ளி அல்லது தங்கத்தில் அணிந்து கொள்வது பல சிறப்புகளை தேடித் தரும்.

3. தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்கள் மகாலட்சுமி தாயின் திருவுருவப் படத்தை அணிந்து கொள்வது மேலும் பல அதிர்ஷ்டங்களை தேடித்தரும்.

4. கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்கள் அம்பாள் அல்லது உங்களது குலதெய்வத்தின் படத்தை அணிந்து கொள்வது சிறப்பை கொடுக்கும். மேலும் ராகவேந்திரா திருவுருவப் படத்தையும் அணிந்து கொள்ளலாம்.

5. மேஷம் ராசி:
மேஷம் ராசியில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணு மற்றும் முருகனின் டாலரை அணிந்து கொள்ளலாம்.

6. மீனம் ராசி:
மீனம் ராசிக்காரர்கள் ஓம் என்ற மந்திரத்தை டாலராக அணிந்து கொள்வது மேலும் பல அதிர்ஷ்டத்தை தேடி தரும். மேலும் சுவஸ்திக் சின்னம், வேல் சின்னம், திரிசூலம் ஆகியவற்றையும் அணியலாம்.

7. மிதுனம் ராசி:
மிதுன ராசிக்காரர்கள் மதுரை மீனாட்சி அம்மனின் திருவுருவம் பதித்த டாலரை அணியலாம். மேலும் ஹயக்ரீவர், மகாவிஷ்ணு ஆகிய படத்தையும் அணியலாம்.

8. விருச்சிகம் ராசி:
விருச்சிக ராசிக்காரர்கள் முருகன், நரசிம்ம பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி, வேல் ஆகிய சின்னங்களை அணியலாம்.

9. சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமான், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி ஆகிய திருவுருவப் படங்களை அணியலாம். பள்ளி செல்லும் குழந்தைகள் சரஸ்வதியின் படத்தை அணிவது நல்லது.

10. கடகம் ராசி:
கடக ராசிக்காரர்கள் பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணர், மகாலட்சுமி, குருவாயூரப்பர் ஆகிய படங்களை அணியலாம்.

11. மகரம் ராசி:
மகர ராசிக்காரர்கள் அவர்களது குலதெய்வம், முருகன், விஷ்ணு, நரசிம்மர், குபேரர் ஆகிய திருவுருவ படங்களை அணிந்து கொள்ளலாம்.

12. துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்கள் சூலம், வேல், மகாலட்சுமி, சிவபெருமான் ஆகிய படங்களை அணிந்து கொள்ளலாம்.