Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?

0
158

Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?

வீட்டுக் கடன்:

எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும் ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு பலருக்கும் உதவி புரியவது வங்கிக் கடன்கள் தான் இருக்கின்றன. இதன் மூலமாக தான் பலருடைய வாழ்நாள் கனவு நனவாகிறது.இருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் சம்பளம் மூலமாக மற்றும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு கட்டுவது என்பது இயலாத காரியம் ஆனாலும் என்று பலருக்கும் வீடுகட்ட உதவுவது வீட்டுக் கடன்தான்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒருவர் கட்டிய வீட்டிற்கு அளவில் இன்று ஒரு சென்ட் இடம் கூட வாங்குவது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. இருந்தாலும் மெட்ரோ நகரங்களில் விலைவாசி கேட்கவே தேவையில்லை. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு விலை கிடுகிடுவென்று ஏறிக்கொண்டே இருக்கிறது.

குறைவான வட்டியில் வீட்டுக் கடன்:

ஆனாலும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் என்று பல நிறுவனங்களும் வீடு வாங்க மற்றும் வீடு கட்டுவதற்கு இடம் வாங்க என எல்லாவற்றிற்கும் கடன் கொடுக்கின்றன. அதிலும் இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது நினைத்துக்கூட பார்க்காத அளவில் சரிதான் இருக்கின்றது எனவே இது வீடு கட்ட மற்றும் வாங்குவதற்கு சரியான நேரம் ஆகவே பார்க்கப்படுகின்றது.

நோய்த் தொற்றின் காரணமாக, வீழ்ச்சி கண்டு இருக்கின்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை சமீபத்தில் ஒரு சில மாதங்களாகவே தொடர்ந்து குறைவாகவே வைத்திருக்கிறது. ஆனாலும் வங்கிகள் பண பழக்கத்தினை ஊக்குவிக்கும் விதத்தில் பல சலுகைகளையும் வழங்கி வருகிறார்கள். அதிலும் பெண்களுக்கு கூடுதல் வசதிகள் உள்ளிட்டவற்றை வாரி வழங்கி வருகிறார்கள்.

நிதி நிறுவனங்களை விடவும் தனியார் வங்கிகளை விடவும் பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் அதனை நாடிச் செல்லலாம். அந்த விதத்தில் குறைவான வட்டியில் கடன் கொடுக்கும் ஒரு சில வங்கிகளில் என்ன நிகழும் என்பதை இந்த கட்டுரையில் நாம் பார்க்க உள்ளோம்.

Housing loan low interest bank in Tamil nadu

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் 6.65-7.35 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. பேங்க் ஆப் இந்தியாவில் 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சத்திற்கும் 6.70-7.30 சதவீதம் என்று சொல்லப்படுகிறது..

பேங்க் ஆப் பரோடா யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் பேங்க் ஆப் பரோடா 30 லட்சம் முதல் 75 லட்சத்திற்கு 6.75- 8.35 சதவீதம் வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.70-8.35 ஆகும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் 75 லட்சம் வரையில் 6.8-7.35 சதவீதம் வட்டி விகிதமும் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.65- 7.40 சதவீதம் ஆகும்.

Previous articleஆபத்து இல்லாத லாபம் தரக்கூடிய ஐந்து அம்ச அரசு திட்டங்களில் இணைவது எப்படி? விவரம் இதோ!
Next articleவாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி