எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

Photo of author

By Janani

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

Janani

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை தானாக குளிர விடலாமா? அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அதேபோன்று கார்த்திகை தீபம் மற்றும் கோவில்களில் ஏற்றக்கூடிய தீபமானது தானாக தானே குளிர்கிறது. அது அவ்வாறு குளிரலாமா? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் உண்டு.

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? எந்தெந்த விளக்குகள் தானாக குளிர விடக்கூடாது? என்பதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம்.

நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய விளக்கினை நாமாக குளிர்விப்பது தான் நல்லது. அதேபோன்று தினமும் இரவில் நமது வாசலில் ஒரு அகல் விளக்கினை ஏற்றுவோம். அதனுடன் நமது பூஜை அறையிலும் ஒரு விளக்கினை ஏற்றுவோம். இந்த வாசலில் ஏற்றக்கூடிய அகல் விளக்கு தீபமானது தானாக குளிரலாம். ஆனால் நமது பூஜை அறையில் நாம் ஏற்றக்கூடிய தீபத்தினை நாம் தான் குளிர்விக்க வேண்டும்.

கார்த்திகை தீபம் அன்று நாம் வீடு முழுவதும் ஏற்றக்கூடிய தீபத்தினையும் நாம் குளிர்விக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதேபோன்று ஆலயங்களில் நாம் ஏற்றக்கூடிய தீபத்தையும் நாம் குளிர்விக்க தேவையில்லை. நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய விளக்கினை மட்டும் தான் கண்டிப்பாக நாம் குளிர்விக்க வேண்டும்.

நாம் விளக்கு ஏற்றிய சிறிது நேரத்தில் அந்த விளக்கில் எண்ணெய் எவ்வளவு இருக்கிறது என்பதனை சரிபார்த்துக் கொண்டு, சரியான நேரத்தில் அந்த விளக்கினை நாம் குளிர்வித்து விட வேண்டும். ஒரு பூவினை வைத்து அந்த விளக்கினை குளிர்வித்து விடலாம். அழகாக உள்ள ஒரு பூவினை வைத்து அந்த விளக்கினை குளிர்விக்க சிலருக்கு மனம் இருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் அந்த விளக்கின் திரியை மெதுவாக விளக்கின் உள்ளே இழுத்து விடலாம். அவ்வாறும் விளக்கினை குளிர்விக்கலாம்.

அதேபோன்று அடுத்த நாள் விளக்கினை ஏற்றும்பொழுது அதிலுள்ள திரி மற்றும் எண்ணெயை மாற்றிவிட்டு புதியதாக திரி மற்றும் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். ஒரு சிலர் வேறு விதமாகவும் விளக்கினை குளிர்விப்பார்கள். அவ்வாறு தங்களுக்கு ஏற்ற முறையிலும் விளக்கினை குளிர்விக்கலாம். ஆனால் பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை நாம் கண்டிப்பாக மலையேற்றி விட வேண்டும். அதாவது குளிர்வித்து விட வேண்டும்.