எந்த ராசிக்கு எந்த ராசியுடன் திருமணம் செய்யக்கூடாது? பொருந்தாத ராசிகள் எவை எவை?

Photo of author

By Janani

எந்த ராசிக்கு எந்த ராசியுடன் திருமணம் செய்யக்கூடாது? பொருந்தாத ராசிகள் எவை எவை?

Janani

Which zodiac sign should not marry with which zodiac sign? Which are incompatible zodiac signs?

கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், இது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் என்று சொல்லக்கூடிய ராசி பொருத்தம் மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர். எனவே எந்த ராசி எந்த ராசி உடன் இணையக்கூடாது என்பது பற்றி காண்போம்.

மேஷம் ராசியினர் விருச்சிகம் ராசியினரை திருமணம் செய்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று கூறப்படுகிறது. ரிஷபம் ராசியினர் தனுசு ராசியை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் அவர்களது வாழ்க்கை ஒற்றுமையாக இருக்காது. மிதுனம் ராசியினர் மகரம் ராசியை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் திருமண வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.

கடகம் ராசியினர் கும்பம் ராசியை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் ஒற்றுமை இருக்காது. சிம்மம் ராசியினர் மீனம் ராசியினரை திருமணம் செய்தால் அவர்களது திருமண வாழ்க்கையில் சந்தோஷமும் ஒற்றுமையும் இருக்காது. கன்னி ராசியினர் மேஷம் ராசியை திருமணம் செய்தால் அவர்களது திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும்.

துலாம் ராசியினர் ரிஷபம் ராசியினரை திருமணம் செய்தால் அவர்களது வாழ்க்கை கஷ்டம் மற்றும் நஷ்டத்தில் முடியும். விருச்சிகம் ராசியினர் மிதுனம் ராசியினரை திருமணம் செய்தால் அவர்களது திருமண வாழ்க்கையில் தேவையில்லாத வாக்குவாதமாக நடக்கும்.

தனுசு ராசி கடகம் ராசியினரை திருமணம் செய்தால் அவர்களது வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தில் முடியும். மகரம் ராசியினர் சிம்மம் ராசியினரை திருமணம் செய்தால் அவர்களது வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படாது.
கும்பம் ராசியினர் கடகம் ராசியினரை திருமணம் செய்தால் கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது.

மீனம் ராசியினர் துலாம் ராசியினரை திருமணம் செய்தால் அவர்களது திருமண வாழ்க்கை கீரியும் பாம்பும் போல ஒற்றுமை இல்லாத வாழ்க்கையாக அமையும்.

இந்த ராசியினர் இந்த ராசியினருடன் இணைந்தால் மட்டுமே திருமண வாழ்க்கையானது சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் அமையும். அவ்வாறு இல்லாமல் பொருந்தாத ராசியினரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையானது சந்தோஷமற்று ஒற்றுமை இல்லாமல் வாழக்கூடிய சூழலே ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது.