எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

Photo of author

By Janani

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

Janani

மீனை பணத்தை கொடுத்து வாங்கினால் யார் வேண்டுமானாலும் வளர்க்க வேண்டியது தானே என பலரும் எண்ணலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜீவன்கள் மட்டுமே பொருந்தும் என்ற நியதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்து தான் எந்த உயிரினம் ஆனாலும் வளர்க்க முடியும். இதனை அறிவியல் பூர்வமாகவும் விளக்கலாம்.

அதாவது மனிதன் என்னதான் ஆறறிவு படைத்தவனாக இருந்தாலும் கூட, விலங்குகள் உணரக்கூடிய சமிக்ஞைகளை மனிதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியாது. உதாரணமாக மழை வருவதை அறிந்த மயில் தனது தோகையை விரித்து ஆடும். அதே போன்று பூகம்பம், சுனாமி இது போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்பாக, விலங்குகளிடம் ஒரு விதமான மாற்றங்களை நம்மால் காண முடியும்.

மனிதன் தனது அறிவினால் இது போன்ற நிகழ்வுகளை கண்டறிய பல கருவிகளை கண்டறிந்து வைத்திருந்தாலும் கூட, தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனால் இதனை முன்கூட்டியே உணர முடியுமா என்றால், அது கண்டிப்பாக முடியாது.
ஜோதிடத்தில் பஞ்சபூதங்களின் அடிப்படையில் தான் ராசிகளை பிரித்து வைத்துள்ளனர். அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். ஆகாயம் என்பதை அளவிட முடியாது என்பதால் அது அனைத்திற்கும் பொதுவாக அமையும்.

மீன்கள் என்பது மிகவும் சென்சிடிவ் ஆன உயிரினம். எனவே வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை உடனே ஈர்க்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. ஜோதிடத்தில் நீர் ராசிகள் என்பவை கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஆகும்.

இதில் கடகம் என்பது நண்டு. இது நீர், நிலம் ஆகிய இரண்டிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது எனவே இது மூன்றாவது அமைப்பை கொண்டது. விருச்சிகம் என்பது அறிய முடியாத ஆழ்கடல் உயிரினத்தை குறிக்கும் என்பதால் இது இரண்டாவது அமைப்பை கொண்டது. மீனம் என்பது மீனைக் குறிப்பதால் இது முதல் அமைப்பை பெறும்.

எனவே விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மீனை வளர்க்கலாம். ஜோதிடத்தில் உயர்நிலை சுப ஸ்தானம் என்பது 1,5,9. அதாவது இது திரிகோண ஸ்தானம் எனப்படும். இந்த ஸ்தானத்தில் இந்த மூன்று ராசிகளும் வருவதால் மீன் வளர்ப்பதற்கு உகந்த ராசியாகவும் திகழ்கிறது.

மீன்களைப் பார்க்கும் பொழுது ஒரு விதமான சந்தோசம் மனதில் ஏற்படுகிறது. மன அமைதியும் கிடைக்கிறது. ஆனால் நீருக்கு எதிரி நெருப்பு என்பதால் நெருப்பு ராசிக்காரர்கள் ஆன மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களும், நிலம் ராசிக்காரர்கள் ஆன ரிஷபம் கன்னி மகரம் ஆகிய ராசிக்காரர்களும் மீனை வளர்க்கக் கூடாது.

அவ்வாறு அவர்கள் மீனை வளர்த்தாலும் அவ்வளவு யோகமாக அவர்களுக்கு அமையாது. காற்று ராசிக்காரர்களான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் மீனை வளர்க்கலாம்.