மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

Photo of author

By Jeevitha

மகளிர் உரிமை திட்டத்திற்கு யாருக்கு தகுதி மற்றவர்களுக்கு தகுதி இல்லையா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

தற்போது தமிழக அரசு மகள் இருக்கு வாரம் தோறும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளது மேலும் அந்த திட்டத்திற்கு சில தகுதிகளை அறிவித்துள்ளது அந்த தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டும் உள்ளது.

தகுதி உள்ளவர்கள்

1. குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்.

2. ரூபாய் 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம்’ ஈட்டும் குடும்பங்கள்.

3. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

4. ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,500 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

5. குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமை தொகை வழங்கப்படும்.

6. திருமணமாகாத பெண்கள், கை பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமை தொகை வழங்கப்படும்.

7. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்.

8. ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளி குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

தகுதி இல்லாதவர்கள்

1. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

2. மாநில, மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்

3. ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப் டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

4. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்

5. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OA), விதவை ஓய்வூதியம் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.