யார் முதல்வர் வேட்பாளர் கூட்டணியில் குண்டு போட்ட பாஜக தலைமை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் கூட, அதனை பாரதிய ஜனதா தான் அறிவிக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை சிறிது காலத்திற்கு முன்பு இருந்தது. அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி அவர்களை சமாதானப்படுத்தி, இறுதியாக அந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, பாரதிய ஜனதா தான் முடிவு செய்யும் என்று அந்தக் கட்சியின் தமிழக தலைவர் முருகன் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.

இந்தநிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தலைமையே முடிவு செய்யும் இப்போதைய கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில் தொடரும், ஆனாலும் யார் தலைமையில் தேர்தலை சந்திக்கலாம் என்பது தொடர்பாக தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.