குஞ்சு நாயக்கர் யார்? கண்ணுபட போகுதையா படத்திற்கும் இவருக்கும் என்ன ?

0
2403
#image_title

குஞ்சி நாயக்கர் என்பவருக்கும் கண்ணுபட போகுதய்யா படத்திற்கும் என்ன சம்பந்தம்.

நாம் எல்லோரும் விஜயகாந்த் சிம்ரன் சிவக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கண்ணுபட போகுதய்யா படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதில் முதல் சீன் ஒன்று வரும் அதில். உண்மையான கதையை படத்தில் சீனாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமயம் சோ தர்மன் எழுத்தாளர் அவர்கள் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது வழக்கத்திற்கு மாறாக அந்த பஸ்ஸில் அதிகமாக கூட்டம் இருந்திருக்கிறது. ஏன் ? இன்றைக்கு இவ்வளவு கூட்டம் என்று கேட்க,  குஞ்சு நாயக்கர் இறந்துவிட்டார் என்று பக்கத்தில் இருக்கும் ஒரு பெரியவர் சொல்ல, யார் அந்த குஞ்சு நாயக்கர்?  என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அந்த ஊரில் இறங்கி இருக்கிறார் எழுத்தாளர் சோ தர்மன்.

குஞ்சி நாயக்கர் என்பவர் ஒரு கிராமத்தில் வாழும் வெங்கடசாமி நாயக்கர் தான் அவரது இயற்பெயர். அப்பொழுது அவர் ஒரு பெரிய நாயக்கர் ஊர் முழுவதும் மதிக்கும் ஒரு மனிதர். அவருக்கு பெரிய வயல் வரப்பு உள்ளது. அந்தப் பயிர் நன்குமுற்றி அறுவடைக்கு வந்துள்ளது. அறுவடை செய்யலாம் என்று 50 வேலையாட்களை எல்லாம் கூப்பிட்டாயிற்று.

அங்கு போய் சென்று பார்த்த வெங்கடசாமி நாயக்கர் இன்றைக்கு அறுவடை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். எல்லோரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் பயிர் முற்றி விட்டது ஏன்? என்று இவ்வாறு தினமும் சென்று பார்த்து வரும் பொழுது ஒரு மாதம் கழித்து இன்றைக்கு அறுவடை செய்யலாம் என்றும் மிகவும் சந்தோஷமாக அனைத்து வேலையாட்களையும் அழைத்துள்ளார்.

அப்படி அந்த வேலையாட்கள் எதற்கு அய்யா இவ்வளவு காலம் பொருத்தீர்கள் பயிர்கள் பாதி கூட வீணாகப் போயிருக்குமே!  ஏன் இவ்வளவு நாள்  என்று கேட்ட பொழுது அங்கு வயலில் ஒரு சிட்டுக்குருவி குஞ்சு பொரித்து இருந்தது. இப்பொழுது நாம் அதை அறுவடை செய்தால் அந்த குஞ்சுகள் இறந்து போகும். அதனால் அது பறக்கும் வரை காத்திருந்து அறுவடை செய்யலாம் என்று நினைத்தேன், என்று சொன்னவுடன் மக்கள் வியந்து அன்றிலிருந்து அவரது பெயர் குஞ்சு நாயக்கராக மாறிவிட்டது.

இப்படி இதை ஒரு பத்திரிக்கையில் சின்ன பக்கங்களில் எழுதியுள்ளார் சோ தர்மன் எழுத்தாளர்.இந்த கதையை பார்த்து வியந்து போன சுஜாதா அவர்கள் இதை குமுதத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

தனது கட்டுரை குமுதத்தில் வந்ததை பார்த்த சோ தர்மன் சுஜாதாவிற்கு கடிதம் ஒன்று எழுதுகிறார்.  என்னுடைய எந்த அனுமதியும் வாங்காமல் இது குமுதத்தில் அச்சிடப்பட்டுள்ளது என்று கூற, சுஜாதாவும் பதிலுக்கு 2000 ரூபாயை அனுப்பி உரிமையோடு எடுத்துக் கொண்டேன் என பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இதை குமுதத்தில் படித்த இயக்குனர் பாரதி கணேஷ் அவர்கள் இதை ஓபனிங் சீனாக வைக்கலாம் என்று எண்ணி அந்த சீனை கண்ணுபட போகுதய்யா படத்தில் முதல் சீனாக சிவக்குமார் சொல்லும்படி அமைந்தது தான் இது.

Previous articleARS ஸ்டுடியோ விரிவாக்கம் என்ன? பின்னணி என்ன? பரிசாக கொடுத்த மக்கள் சொத்து!
Next articleநீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!