அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளர் யார்? டொனால்ட் டிரம்ப் செய்த ஆச்சரியமூட்டும் செயல்! 

Photo of author

By Sakthi

அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளர் யார்? டொனால்ட் டிரம்ப் செய்த ஆச்சரியமூட்டும் செயல்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து குடியரசு கட்சி தற்பொழுது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா நாட்டில் இந்த ஆண்டு நவம்பர்  மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்பொழுது அதிபராக இருக்கும் ஜோ பைடன் அவர்கள் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றார். அதே போல துணை அதிபர் பதிவிக்கு கமலா ஹாரிஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்.
இதையடுத்து அமெரிக்கா நாட்டில் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டொனால்ட் டிரம்ப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காயமடைந்த டிரம்ப் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடியரசு கட்சி தற்பொழுது அதிபர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் போட்டியிடுவார் என்று குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. மேலும் குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கு டொனால்ட் டிரம்ப் அவர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் அவர்கள் துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்த ஓஹியோ மாகாணத்தின் செனட்டராக இருக்கும் ஜேம்ஸ் டேனிட் வான்ஸ் அவர்களை பரிந்துரை செய்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்த பரிந்துரை குடியரசுக் கட்சியினரை மட்டுமில்லாமல் அரசியல் விமர்சகர்கள் பொதுமக்கள் என அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
ஏன் என்றால் டொனால்ட் டிரம்ப் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் டொனால்ட் டிரம்ப் அவர்களை ஜேம்ஸ் டேனிட் வான்ஸ் அவர்கள் கடுமையாக விமர்சித்தார். ஆனால் தன்னை விமர்சித்த நபரையே துணை அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்த டொனால்ட் டிரம்ப் அவர்களின் செயலை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.