பா.ம.க ஒன்றிய செயலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழர் நீதிக்கட்சியினர்?

Photo of author

By Pavithra

பா.ம.க ஒன்றிய செயலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழர் நீதிக்கட்சியினர்?

Pavithra

தமிழர் நீதிக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் கதிர்வேல் என்பவர்,
பெண்ணாடம் வால்பாறை பகுதியில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கொட்டகையின் பூட்டை உடைத்து,கொட்டகையை பெரும் சேதப் படுத்தி உள்ளார்.

இதனைக் கண்டு,பாமக நல்லூர் ஒன்றிய செயலர் வெங்கடேசன் என்பவர் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த தமிழர் நீதிக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கதிர்வேல் என்பவர் பாமகவை சேர்ந்த வெங்கடேசனை ஆபாசமாக திட்டியும்,கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வெங்கடேசன் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில், தமிழர் நீதிக் கட்சியின் பொதுச்செயலர் கதிர்வேல் என்பவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.