யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்!

0
255
Who wants to go by boat? Get ready - port officials!
Who wants to go by boat? Get ready - port officials!

யாருக்கெல்லாம் படகில் செல்ல ஆசை? தயாராகுங்கள் – துறைமுக அதிகாரிகள்!

நம்மில் பலருக்கு வெளியில் வேடிக்கை பார்ப்பது என்றால் கொள்ளை பிரியம். சிறுவயதில் அனைவருமே ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கைக்கு போட்டி போட்டு இருப்போம். இயற்கை அழகை ரசிப்பதில் அப்படி ஒரு சந்தோசம். இது அனைவருக்குமே பிடித்த விஷயம். தற்போது சென்னையிலிருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் வரை பயணிகள் படகுப் போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகத்தில் திட்டமிட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகின்றன.

பயணிகளை ஈர்க்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைக்கான பணிகள் தொடங்கி உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், மற்றும் புதுச்சேரியில் சிறு துறைமுகங்கள் அதிகம் உள்ளதன் காரணமாக இந்த படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று.

ஒரே நேரத்தில் அதிக பட்சம் 20 பேர் வரை பயணம் செய்யும் வகையில், படகு போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளது. கடல் வழி பயணத்தில் இயற்கை அழகையும், கடற்கரையோர நகரங்களையும் ரசித்தவாறு படகுப் போக்குவரத்து அமையும் என்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் இந்த படகு போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கும் வருவாயை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. படகு போக்குவரத்து சேவைகள் இடையே உள்ள சிறு துறைமுகங்களை அழகுபடுத்தும் பணியும், ஆழப்படுத்தும் பணியும் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயணிகளிடமிருந்து படகுப் போக்குவரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து வரும் காலங்களில் இத்திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக துறைமுக அதிகாரிகள் உறுதியாக  தெரிவித்துள்ளனர்.

Previous articleரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படத்தின் ரிலீஸ் காட்சிகள்!
Next articleஹேவல்ஸ் விற்பனை வளர்ச்சியில் வலுவானது!! Q1 நெட் பிராபிட் 268% உயர்ந்துள்ளது!!