விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! திமுக வேட்பாளர் தேர்வில் போட்டி..!

0
239
Vikravandi By Election 2024
#image_title

Vikravandi By Election 2024: தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். 

இதனால் விக்கிரவாண்டி காலியான தொகுதி என அறிவிப்பு வெளியான நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இதன்படி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வரும் ஜூன் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும் எனவும், ஜூன் 21ஆம் தேதி வேட்பமானு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மேலும் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாளாக கூறப்பட்டுள்ளது. 

திமுக சார்பில் யாருக்கு சீட் கிடைக்கும் 

விக்கிரவாண்டி தொகுதியில் (vikravandi sattasabai therthal 2024) போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான திமுகவில் பல்வேறு நபர்கள் வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி விழுப்புரம் நகராட்சி சேர்ந்த முன்னாள் சேர்மன் ஜனகராஜ்,  முக்கியமாக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, முன்னாள் எம்எல்ஏ மகன் செல்வகுமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாநில விவசாயி அனைத்து துறை தலைவர் அன்னியூர் சிவா, ஒன்றிய செயலாளர்  வேம்பி ரவி ஆகியோர் வாய்ப்புகளை கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு வாய்ப்பு கேட்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

மேலும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலான மக்களாக இருப்பதால் கட்சியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்தான் நிறுத்த வேண்டும் என கட்சி தலைமை யோசித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: வரப்போகுது புதிய ரூல்ஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

Previous articleபாடவேளை மற்றும் விடுமுறையில் மாற்றம்.. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!
Next articleதமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை புதிய வாட்ஸ் அப் சேனல் தொடக்கம்