Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவின் பேட்டிங் தோல்விக்கு புஜாராவை ஏன் நீக்கினீர்கள்? முன்னாள் வீரர் கேள்வி!!

Why did you remove Pujara for India's batting failure? Ex player question!!

Why did you remove Pujara for India's batting failure? Ex player question!!

இந்தியாவின் பேட்டிங் தோல்விக்கு புஜாராவை ஏன் நீக்கினீர்கள்? முன்னாள் வீரர் கேள்வி!!

மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் தொடரின் சாம்பியன்ஷிப் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ரகானே-வைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் மிக மோசமாக விளையாடினார்கள். ரகானே மட்டுமே இந்த ஆட்டத்தில் சிறிது நம்பிக்கை கொடுத்து விளையாடி வந்தார்.

இதற்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களுடன் விளையாட உள்ளனர். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரகானே, கோலி, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அதே சமயம் முன்னணி வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், நவ்தீப் சைனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியில் புஜாரா இடம் பெறாதது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இந்திய அணியில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, அவர் எந்த காரணத்தால் நீக்கப்பட்டார்? இந்தியாவின் பேட்டிங் தோல்விக்காக இவரை ஏன் பலிகாடாக ஆக்கவேண்டும். மேலும் இவர் இந்திய அணியின் விஸ்வாசமான வீரர். இந்தியாவுக்காக இவர் விஸ்வாசமாக விளையாடி பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இவருக்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் இல்லை என்ற காரணத்தை கொண்டு புஜாராவை நீக்கி உள்ளீர்கள் என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Exit mobile version