ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்!
நம் கலாச்சாரத்தில் பல நெறி முறைகள் இருந்தாலும் காலப்போக்கில் நாம் பலவற்றை அப்படியே விட்டு விட்டோம். அப்படி பலவற்றை நாம் கைவிட்டாலும் சிலவற்றை கை விடாமல் முன்னோர்கள் வழி பின்பற்றுகிறோம். அப்படி ஒன்று தான் ஆடி மாதம். இந்த மாதத்தில் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்யாமல் தள்ளி வைக்கிறார்கள். தெய்வ காரியங்களையும், வழிபாடுகளையும் அதிகம் செய்கிறார்கள். பொதுவாக ஆடி மாதத்தில் கணவன் மனைவி இணையக் கூடாது என்று சொல்வார்கள். இதையும் நம் நாட்டில் இன்றும் மறக்காமல் பின்பற்றுகிறார்கள். புதிதாக கல்யாணம் செய்து இருக்கும் ஜோடிகளை ஆடி மாதத்திற்கு என சீர்செய்து புது மணப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள்.
இதற்கு காரணம் என்ன என்று பலதரப்பட்ட மக்களுக்கு தெரியாது என்றாலும், உண்மையான காரணம் இது தான் ஆடி மாதத்தில் கணவன், மனைவி இணைவதால் சித்திரையில் குழந்தை பிறக்கும். மேலும் சித்திரையில் நம் நாட்டு சூழ்நிலைக்கேற்ற ஏற்ப வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால், பிறந்த குழந்தை வெட்டைச் சூட்டினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் தான் அப்படி ஒரு காரணத்தை பெரியோர்கள் மறைமுகமாக நமக்கு கூறியுள்ளார்கள்.
புதுமண தம்பதிகளுக்கு இது தெரியாமல் அவர்கள் அவதியுறுவார்கள். புதுமண ஜோடிகளுக்குத்தான் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம். மேலும் ஆடி மாதத்தில் புது காவிரி நீர் பாய்ந்து வரும் எனவே கொங்கு மண்டலங்களான கோவை, சேலம், ஈரோடு, மேட்டூர் போன்ற இடங்களில், புதுமண பெண்கள் சில சடங்குகளையும் செய்து வருகின்றனர்.
ஆனால் கடந்த வருடமும், இந்த வருடமும் கொரோனா பரவலின் காரணமாக போலீசார் அவற்றையெல்லாம் அனுமதிக்கவில்லை. இந்த ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் நாமும் அம்மனின் அருளை பெற்று வளர்வோம்.