துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த அந்த கட்டுரையால் கடுமையாக சாடிய திமுகவினர்!

Photo of author

By Sakthi

காங்கிரஸுக்கு திமுக எத்தனை சீட் கொடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மாலன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அந்த கடிதம் துக்ளக் இதழில் வெளிவந்திருக்கிறது.

இந்த கடிதம் திமுகவினரை கோபம் அடைய செய்து இருக்கின்றது கிண்டல் செய்யும் பணியில் அந்த கடிதம் எழுதப் பட்டிருப்பதால் திமுக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை கொந்தளிப்பில் இருக்கிறார்கள் ஆகவே அந்த கடிதத்தை எழுதிய மாலனுக்கு கடுமையான எச்சரிக்கை செய்து வருகிறார்கள் திமுகவினர்.

இந்த நிலையில் திமுகவுடைய அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் பத்திரிக்கையாளர் மாலனை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கின்றது. திமுகவும் காங்கிரசும் செய்துகொள்ளும் தொகுதி பங்கீடு ஆனது இரு கட்சி தலைமைக்கும் மட்டுமே உரிமையானது இதில் மாலன் எதற்காக தலையிடுகிறார் என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து இருக்கின்றது முரசொலி கொள்கை பதவி ஆகியவை பற்றி திமுகவுக்கு வகுப்பு எடுக்க தேவையில்லை துண்டு வேட்டி கதைகளை எங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கின்றது.

திமுக தலைவரின் ஜாதகம் என்ன என்று ஜோசியம் பார்க்கிறீர்களே மாலனுடைய ராசிக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லையா என்று கேட்டு இந்தியா டுடே பத்திரிக்கையில் அவருடைய வேலைக்கு பரிந்துரைத்த இரண்டு தலைவர்கள் ராஜீவ் காந்தி, ராஜேஷ் பைலட் மரணமும் மிகத் துயரமானது ராசிநாதன் இதற்கு காரணமா என்று அதிர்ச்சி கேள்வியை எழுப்பி இருக்கின்றது .

கருப்பையா மூப்பனார் இடம் சிவசங்கரி தெரிவித்து ராஜேஷ் பைலட் இடம் கருப்பையா மூப்பனார் தெரிவித்து ராஜீவ் காந்தியிடம் ராஜேஷ் பைலட் தெரிவிக்க பாபுசாவ்லாவிடம் ராஜீவ் காந்தி தெரிவிக்க அருண் பூரியிடம் பிரபு சொல்ல இத்தனை காங்கிரஸ் தலைவர்களும் கிடையாது என்றால் சட்டையை கிழித்துக் கொண்டு தான் இருப்பார் இந்த நாராயணன் அத்தனை காங்கிரஸ் தலைவர்களின் தயவில்தான் இந்தியா டுடே பத்திரிகையில் பணிக்கு சேர்ந்தார் என்றும் மாலன் இப்போது பாஜகவிற்கு விலை போய்விட்டார் என்று கடுமையாக சாடி இருக்கின்றது.