ரஜினிகாந்தை பங்கம் செய்த அமைச்சர்!

Photo of author

By Sakthi

18 அரியர்களை வைத்திருப்பவர்களை தெய்வத்தால் கூட தேர்வில் தேர்ச்சி பெற வைக்க முடியாது. ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ச்சிபெற வைத்திருக்கின்றார். என்று அமைச்சர் ஆர் வி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார் .

மதுரையிலே பத்திரிக்கையாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அதிமுகவின் சாதனைகளை வீடு வீடாக பிரச்சாரம் செய்வோம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியிலே வந்த இந்த அரசு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்து வருகின்றது. சட்டம் ஒழுங்கு, நீர் மேலாண்மை திட்டம் வைரஸ் தடுப்பு, ஆகியவற்றில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. எங்கள் அரசு நான்கு வருடங்களில் 40,000 போராட்டங்களை சந்தித்திருக்கின்றது. எதிர்க்கட்சிகள் தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கனவு பலிக்காது என தெரிவித்திருக்கின்றார்.

ஒரு ஊரில் திருவிழா நடைபெறும் நேரத்தில், அந்த திருவிழாவிற்கு மிட்டாய் விற்பவர் பஞ்சுமிட்டாய் விற்பவர் என பலரும் வருவார்கள் நாம் அங்கே விற்க கூடிய பொருட்களை பார்த்து ரசித்தாலும், எண்ணமெல்லாம் சாமி தரிசனம் செய்வதில் தான் இருக்கும். அவ்வாறு மக்களுக்கு தெய்வமாய் இருந்து காப்பவர் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .எங்கே தேடி பார்த்தாலும் இவ்வாறு ஒரு முதலமைச்சரை நாம் பார்க்க இயலாது 18 அரியர்களை வைத்திருப்பவர்களை அந்த தெய்வத்தால் கூட தேர்ச்சி பெற வைக்க இயலாது ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ச்சிபெற வைத்திருக்கின்றார் என்று தெரிவித்தார் அமைச்சர்.

அதோடு ஓய்வூதியம் வாங்க வேண்டிய வயதில் எதற்காக அரசியல்? மக்களை சந்திக்க வருகிறீர்கள் இதற்கு முன்னால் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை யாருக்காவது கொடுத்து இருக்கிறீர்களா? என்று தெரிவியுங்கள் பார்க்கலாம் புயல், மழை, வறட்சி, என்று எந்த சூழ்நிலையிலும் பங்கெடுக்காமல் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருப்பவர்கள் கடமை செய்து கொண்டு இருப்பவர்கள் மீது சேற்றை வாரி தூவுகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள், அரசியலுக்கு புதிதாக வந்து என்ன செய்யப் போகிறார்கள், மக்களுக்கு என்ன கொடுக்கப் போகிறார்கள் அவர்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள், என்பதை பற்றி இதுவரையில் தெரிவித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உடைய சொந்த வீடு அதிமுக புதிதாக வீடு கட்டியவர்கள் அந்த உரிமையை எடுத்துக் கொள்ள இயலாது. என்றும் யார் அதிமுகவிற்கு சொந்தம் எம்.ஜி.ஆர் உடைய வாரிசு என்பது போல கமல்ஹாசன் பேசியிருக்கின்றார். கமல்ஹாசன் எந்த கொள்கையும் இல்லாமல் பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கின்றது என விமர்சனம் செய்திருக்கின்றார் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.