பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

Photo of author

By Janani

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

Janani

பெண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் ‘பூவையர்’ என்ற பெயரும் உண்டு. நமது நாடுகளில் தான் பூக்களை கட்டி வைத்துக் கொள்ளும் பழக்கம் என்பது அதிகம் உள்ளது. மற்ற நாடுகளில் எல்லாம் ஒற்றை பூவினை வைத்துக் கொள்வார்கள் அல்லது கிரீடமாக அணிந்து கொள்வார்களே தவிர, பூக்களை சரமாக நமது நாடுகளில் வைத்துக் கொள்வது போல வைப்பதில்லை. பூ வைப்பதினால் பெண்கள் அழகாக தெரிவார்கள் என்பதனால் மட்டும் வைப்பதில்லை. பூ வைப்பதனால் அதில் உள்ள வாசனை நமக்கே தெரியாமல் நம்மிடம் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

அப்படி என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம். பூவில் உள்ள வாசனை நம்மிடம் உள்ள கோபத்தை குறைத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. நமது மூளையில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்கவும் உதவுகிறது. ஹாப்பி ஹார்மோன் என்று சொல்லக்கூடிய செரட்டோனின் போன்ற சுரப்பிகள் மிக நன்றாக இயங்குவதற்கும் நாம் வைக்கக்கூடிய பூவில் உள்ள வாசனை உதவுகிறது.
இவை மட்டுமல்லாமல் பெண்கள் பூக்களை வைத்துக் கொள்ளும் பொழுது இஎஸ்பி என்ற பவர் அதிகம் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறியுள்ளது.

அதாவது கூர்மையான அறிவை உடையவளாக அந்தப் பெண் மாறுகிறாள் என்று கூறுகின்றனர். பூவினை பெண்கள் வைத்துக் கொள்ளும் பொழுது அவள் கூர்மையான அறிவையும், நிதானத்தையும், பொறுமையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதனால் தான் நமது முன்னோர்கள் மறைமுகமாக பெண்கள் தினமும் பூ வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

எனவேதான் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதில் பூ இல்லாமல் நிகழ்த்த மாட்டார்கள். அது ஒருவருடைய பிறப்பாக இருந்தாலும் சரி, இறப்பாக இருந்தாலும் சரி பூவினை கொண்டு தான் அந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள். இறந்த வீட்டிற்கு பூவினை எடுத்துச் செல்வது அங்கு உள்ள அனைவருக்கும் ஒரு மன அமைதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு பெண்ணானவள் பிறந்தது முதல் அவளுடன் பயணித்து வருவது இந்த மலர்கள்தான்.

பெண்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு, தலைவாரி பூவினை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மன அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆனால் வீட்டில் உள்ள யார் மீதாவது கோபம் இருந்தால் பெண்கள் குளிக்காமலும், தலைவாரி பூ வைத்துக் கொள்ளாமலும் இருப்பார்கள். ஆனால் அவ்வாறு இருக்கக் கூடாது. பிறக்கும் பொழுதே மனவளர்ச்சி என்பது குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு, தினமும் பூக்களை வைத்து விடலாம்.

ஆண் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையின் தாய் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அந்த வாசனையே அந்த குழந்தையின் மன அழுத்தத்தை குறைத்து, வேகமாக வளர்ச்சி அடைய உதவும். பெண்களுக்கு மலர் என்பதும் ஒரு மங்களகரமான பொருள் தான். எனவே அந்த பூவினை வைத்துக் கொள்ளும் பொழுது நமக்கும் நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் ஒரு நேர்மறையான ஆற்றல்களை உருவாக்கும்.