விக்கரவாண்டி தேர்தல் வெற்றி சூழ்ச்சியின் மூலம் கிடைத்தது! தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி! 

Photo of author

By Sakthi

விக்கரவாண்டி தேர்தல் வெற்றி சூழ்ச்சியின் மூலம் கிடைத்தது! தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
விக்கரவாண்டி தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது சூழ்சியின் மூலமாகத்தான் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
காமராஜர் அவர்களின் 122வது பிறந்தநாள் நேற்று(ஜூலை15) கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மரியாதை செலுத்தினார். அதன்  பிறகு தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் விக்கிரவாண்டி வெற்றி குறித்தும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்தும், காலை உணவுத் திட்டம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் “காமராஜர் சிலைக்கும் சரி காமராஜருக்கும் சரி மரியாதை செலுத்தும் உரிமை ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் தான் இருக்கின்றது. அது பாஜக கட்சிக்கு மட்டுமே இருக்கின்றது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உழல் இல்லாத ஆட்சிக்கும் அடையாளமாக இருந்தால்தான் காமராஜர் அவர்கள். தற்பொழுது பாஜக கட்சியும் காமராஜர் அவர்களின் வழியில் தான் ஆட்சி செய்கின்றது.
இன்று(ஜூலை15) காலை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பத்திரிக்கைகளில் காலை உணவுத் திட்டம் என்ற விளம்பரத்தை தந்துள்ளார். மேலும் அதில் ‘உலகிலேயே முதல் முறையாக’ என்ற. வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இது முதல் முறை இல்லை.
மத்திய அரசு தற்பொழுது நடைமுறைபடுத்தி இருக்கும் புதிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தில் காலை உணவோடு கல்வி என்ற திட்டமும் இருக்கின்றது. எனவே மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களைதான் வாங்கி தமிழக அரசு தாங்கள் செய்வது போல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இது தமிழக அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.
தற்பொழுது விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக கட்சி பெற்ற வெற்றி தோல்விகரமான வெற்றி ஆகும். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெற்றி பெற்று தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் என்று தமிழக அரசு கூறிக் கொள்கின்றது.
திமுக அரசுக்கு நல்ல ஆட்சி செய்வது என்பதை விட சூழ்ச்சி செய்து எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் இருக்கின்றது. திமுக அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது.
விக்கரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சி பெற்ற வெற்றி நல்ல ஆட்சியின் குறியீடு என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறுகின்றார். அப்படி என்றால் கள்ளக்குறிச்சி சம்பவம், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகிய செயல்கள் மோசமான ஆட்சியின் குறியீடுகள் தானே.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கில் அம்பு எய்தவர்களை காப்பாற்றுவதற்காக அம்புகளை காலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் சரணடைந்து விட்டார். அந்த நபரை என்கவுன்டர் மூலம் கொலை செய்துள்ளனர். அங்கு கொலை செய்யப்பட்டது குற்றவாளி இல்லை. அங்கு உண்மையைத் தான் கொலை செய்துள்ளார்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பேட்டி அளித்தார்.