வருந்துகிறேன் நண்பா! கவிஞர் வைரமுத்து கண்ணீர்!

Photo of author

By Sakthi

வருந்துகிறேன் நண்பா! கவிஞர் வைரமுத்து கண்ணீர்!

Sakthi

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கிறார். 54 வயதான கே.வி.ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு உண்டாகி உயிரிழந்து இருக்கிறார்.

அவர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் காலமானார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடைய மறைவுக்கு திரையுலகைச் சார்ந்த எல்லோரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு அவருக்கான இரங்கலையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த விதத்தில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய இளைஞர் இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

வருந்துகிறேன் நண்பா திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் செதுக்கினாய்!

என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?

விதவைக்கேமரா கேவி கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய் நீ என்று தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.