பிரபல நிறுவனத்திற்கு பணம் செலுத்த சம்மதம் தெரிவித்த கூகுள் நிறுவனம்!

Photo of author

By Sakthi

பல வருட காலமாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகிறது விக்கிப்பீடியா நிறுவனம். அண்மைக்காலமாக அந்தத் தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பயனர்களிடம் நன்கொடை கேட்டு வருகிறது.

இதற்காக விக்கிப்பீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தது.

இந்த சூழ்நிலையில், இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு கூகுள் நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும், தகவல்களையும், விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளை பின்தொடர்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக விக்கிப்பீடியா அறக்கட்டளையை ஆதரித்து வருகிறோம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் கூகுள் செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கின்ற தொகை எவ்வளவு என்பது தொடர்பான விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.