21-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கமா? பொதுமக்கள் மகிழ்ச்சி!

Photo of author

By Sakthi

நோய் தொற்று பாதிப்பு குறைந்து இருக்கின்ற மாவட்டங்களில் 50% மாநகர பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து பேச்சுவார்த்தை தனில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் மே மாதம் பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது அதிலிருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது தொடர்ச்சியாக வருடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அது நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் நோய் தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கிட்டத்தட்ட எல்லா விதமான சேவைகளும் அனுமதிக்கப்படுகின்றன. 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப் படாமல் இருக்கின்றன.

தற்சமயம் அமுலில் இருக்கின்ற தரவுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது இதனைத்தொடர்ந்து இன்னும் சில தினங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட ஆளும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்படும் என்ற காரணத்தால் அடுத்த வாரம் பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத் தொடங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்சமயம் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் பேருந்துகளை இயக்கி வருகின்றோம் பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. நோய்த்தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் தமிழக அரசின் முடிவுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் தெரிவிக்கும்போது எதிர்வரும் 21ஆம் தேதி முதல் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மாநகர பேருந்துகள் 50% இயக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக அந்தந்த தொழிற்சங்கங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதோடு போக்குவரத்து ஊழியர்கள் நோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே பணிக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். தற்சமயம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.