பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்!

Photo of author

By Sakthi

உலகளவில் கச்சா எண்ணெயின் விற்பனையில் 2வது இடத்திலிருப்பது ரஷ்யா தற்சமயம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. மேலும் பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதோடு பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

நேற்றைய தினம் டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கும்போது, தற்சமயம் நாட்டில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை நாம் கச்சா எண்ணெய்க்கு 85 சதவீதமும், எரிவாய்வு 55 சதவீதமும், இறக்குமதியை சார்ந்திருந்த போதிலும் எரிபொருள் பற்றாக்குறை உண்டாகாது என தெரிவித்திருக்கிறார்.

மாநிலத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல், டீசல், விலையை மத்திய அரசு குறைத்து தற்சமயம் மீண்டும் அவற்றின் விலையை அதிகரிக்கும் என்று தெரிவித்து வருவது தவறு இந்த விஷயத்தில் மக்கள் நலன் கருதி தேவையான முடிவுகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று அழுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு கிலோவுக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டிருக்கிறது டெல்லியின் அண்டை நகரங்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத்தில் 1 கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.