ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!
ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ள வாணாபுரம் ஊராட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதிகள் உள்ளது.
சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மாவட்டத்திலேயே அதிக பிரசவங்கள் நடைபெறுவதாகவும், இங்கு 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.ஆனாலும் காலை நேரத்தில் வருவோருக்கு மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மாலை நேர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர சிகிச்சைக்கோ வருபவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் சூழ்நிலை உள்ளதாகவும், இல்லாவிட்டாலும் பஸ்ஸில் பயணம் செய்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதால் இங்குள்ள பொது மக்கள் பயன்படும் வகையில் சரி செய்து தரவும் மக்கள் மனு கொடுத்து உள்ளனர்.
மேலும் இந்த சுகாதார நிலையத்தை அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு தரம் உயர்த்தி தரவும், கள்ளக்குறிச்சி மருத்துவர்களை கொண்டு மாலை நேரங்களிலும் மருத்துவர்கள் இங்கே இயங்கவும், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் இணை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.