நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இறுதி முடிவு!

Photo of author

By Sakthi

அரசியல் பிரவேசம் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் இன்றையதினம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பிக்க இருக்கும் அந்த ஆலோசனை கூட்டமானது மதியம் 2 மணி வரை நீடிக்கும் என்று தெரியவருகின்றது.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் பங்கேற்க இருக்கிறார்கள் முககவசம் சமூக இடைவெளி என அரசு விதித்து இருக்கின்ற அத்தனை கொரோனா நிபந்தனைகளின் அடிப்படையில் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கின்றது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 180 நாட்களுக்கும் குறைவான தினங்களே இருக்கும் காரணத்தால் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது ஆலோசனை கூட்டத்தை முன்னிட்டு காலை 6 மணியிலிருந்து ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே குவிய தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின்பு ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு தொடர்பாக ரஜினிகாந்த் இன்று மதியமே செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடுவாரா? இல்லை அதன் பின்னர் அறிக்கை வாயிலாக தெரிவிப்பாரா? என்பதை ரஜினியின் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.