பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

0
159
Will that be the case with the name? Ex-minister severely attacked!
Will that be the case with the name? Ex-minister severely attacked!

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார். அதிமுகவை யாராலும் அசைக்கவே முடியாது. இந்த கட்சியில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவின் கோடியை  பயன்படுத்தவே உரிமை இல்லை என்று கூறுகிறோம்.

இந்நிலையில் பொதுச்செயலாளர் என அவரை கூறிக்கொள்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. சிறையில் இருந்து வந்த எட்டு மாதத்தில், இதுவரை ஒரு முறை கூட ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லாதது ஏன்? இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன் விழா நடக்கும்போது மட்டும் வெளியே வருவது, அவர் எதோ திட்டத்துடன்தான் இருக்கிறார் என்பதை தெளிவாக கூறுகிறது.

இதற்கடுத்து மீண்டும் அடுத்த ஆண்டு தான் வருவார் என்றும் கூறியிருக்கிறார். புரட்சித் தாய் என அவரே பெயர் வைத்துக் கொண்டார். அந்த அளவிற்கு என்ன புரட்சி செய்து விட்டார் சொல்லுங்கள். எம்.ஜி.ஆர் தான் புரட்சித்தலைவர். ஜெயலலிதாதான் புரட்சித்தலைவி. அ தி மு க பொன் விழா எழுச்சியுடன் நடைபெறுவது அவருக்கு பிடிக்கவில்லை.

அவராகவே கல்வெட்டில் பெயர் போட்டுக் கொண்டால் அதன் பெயரில் பொதுச்செயலாளர் என்று சொல்லிவிட முடியுமா? என சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Previous articleமெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி.!!
Next articleவெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்த படக்குழு! அதுவும் விண்வெளியில் இருந்து பூமிக்கு!