ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை!

Photo of author

By Sakthi

தமிழகத்தின் நோய்த்தொற்று பரவலாக அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது என்றும் சொல்லப்பட்டது.

சற்றேறக்குறைய 2 வருட காலத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் செயல்பட தொடங்கினர். ஆனால் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே அப்போது பள்ளிகள் செயல்பட தொடங்கினர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தொடங்கிய அதே போல கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததாக தெரிவித்து ஊரடங்கு பலவிதமான தொடர்புகள் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளத்தில் பலவிதமான விமர்சனங்கள் எழுதின அதாவது தேர்தல் வந்து விட்டதால் நோய் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு மீண்டும் நோய் தொற்று அதிகரிக்கப்படும் என்பது போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தனர்.

இதற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கடுமையாக மறுப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியது ஆகவே இரவு நேர ஊரடங்கு கடந்த 28ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதோடு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்ற நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளொன்றுக்கு 3200 க்கும் குறைவாக  இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் நோய்த்தொற்று ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா? என்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதனடிப்படையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணி அளவில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அப்போது தமிழ்நாட்டில் நோய்தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.