தங்கம் வாங்கும் கனவு நிறைவேறுமா? ரூ.59000-த்தை நெருங்கும் தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

0
67
Will the dream of buying gold come true? Gold price close to Rs.59000! People in shock!
Will the dream of buying gold come true? Gold price close to Rs.59000! People in shock!

Gold Rate:  இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.59000-த்தை நெருங்கி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கங்களுடன்  இருந்து வருகிறது. கடந்த 16– ஆம் தேதி தங்கம் 57 ஆயிரத்தை தாண்டி புதிய உச்ச நிலையை அடைந்தது. இந்த நிலையில் தங்கம் நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கடந்த 19- ஆம் தேதி தங்கம் ரூ.5800- த்தை தாண்டியது. அந்த வகையில் 23-தேதி தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தங்கம், வரலாறு காணாத அளவிற்கு உச்ச நிலையை அடைந்து வருகிறது. அதே சமயம் நேற்று முன் தினம் தங்க விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் வழங்கியது.  அதை கெடுக்கும் விதமாக இன்றைய தங்க விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை ரூ.59000-த்தை தொட்டு உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ. 58,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ107 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இப்படியே தங்கம் விலை உயர்ந்து சென்றால் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்கும் கனவு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Previous articleஇனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்.. இதோ அரசு தரும் ரூ 75000 மானியம்!!
Next articleதொடர்ந்து இந்திய அணியில் ஒதுக்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் !! சி எஸ் கே தான் காரணமா??