ஆளுநர் மற்றும் மாநில தலைவர் பதவி குறித்து அதிரடி முடிவெடுக்கும் பாஜக!! டெல்லிக்கு பறந்த 2 தலைகள்!!

 

 

தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை அவர்கள் நேற்று இரவில் வந்த ஒரு அவசர அழைப்பின் காரணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளார். ஆளுநரின் பதவிக்காலமானது கடந்த ஜூலை மாதத்தின் இறுதி நாளில் நிறைவடைந்ததை அடுத்து ஆகஸ்டு ஒன்றாம் நாள் டெல்லி சென்று நான்காம் நாளே பதவி நீட்டிப்பு குறித்து உறுதிப்படுத்தப் படாமல் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆளுநர் ஆர்.என்.ரவி  அவர்களின் பதவி காலம் நீடிப்பு குறித்த ஆலோசனையை மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் மேற்கொள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் இன்றைய தினமே மாலை மணி 5:10 க்கு டெல்லிக்கு செல்ல உள்ளார். மேலும் ஆர்.என்.ரவி யுடன் அவரது உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் செயலாளர் போன்றோர்களும் செல்ல உள்ளனர்.

இப்படி இருக்கையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று அவருக்கு வந்த அழைப்பின் காரணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். வழக்கமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் பன்னிரு அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவர். இம்முறை தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

இதன் காரணமாக அண்ணாமலை அவர்கள் சென்றுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் மூலம் சர்வதேச அரசியல் என்ற சான்றிதல் படிப்பிற்காக அண்ணாமலை அவர்கள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை லண்டன் சென்று அங்கேயே தங்கிப் படிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை அவர்கள் மீண்டும் திரும்பி வரும்வரையிலும்  அவருக்கு பதிலாக கட்சி நடத்துவதற்காக வேறு யாரேனும் ஒருவரினை களமிறக்கச் செய்வது குறித்த செய்திகள் பேசப்பட்டு வருகின்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அவர்கள் கட்சி தலைமையே அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதாகவும், அவர் ஒரு அடிப்படை தொண்டன் என்றும் கட்சியின் வளர்சிக்காகவே அவர்கள் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.