ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படுமா? இன்று நடைபெறுகிறது ஆலோசனை கூட்டம்!
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் 30- ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் 8 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட 8-ம் கட்ட ஊரடங்கில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டுத்தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு என பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில்,இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நிலவரம்,தடுப்புப் பணி ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றார்.மேலும் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்குமா?அல்லது ஊரடங்கில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.